27 மில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில்5 சந்தேகநபர்கள் கைது

27 மில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில்5 சந்தேகநபர்கள் கைது

27 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 121 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியது.

கடந்த 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் , மன்னார் வங்காலை பகுதியிலும், யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பிலும் கடற்படை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த கேரள கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது 19 முதல் 56 வயதுக்குட்பட்ட 05 சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.

கேரள கஞ்சாவை கொண்டு சென்றதாகக் கூறப்படும் இரண்டு டிங்கி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

டிங்கி படகுகள், கேரள கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நெடுந்தீவு மற்றும் வங்காலை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )