
அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு
அம்பலாங்கொடை – ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது எனவும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


