
தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு ஒரு வருட சிறைதண்டனை
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருட சிறைதண்டனை விதித்துள்ளது.
தாய்லாந்தின் உயர் நீதிமன்றம், முன்னாள் பிரதமரும் கோடீஸ்வரருமான தக்சின் ஷினவத்ராவை இன்று(09)ஒரு வருடம் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்சின் கடந்த ஆண்டு வைத்தியசாலையில் நீண்ட காலம் தங்கியிருந்தமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் அவர் பாங்காக் ரிமாண்ட் சிறையில், குறித்த தண்டனையை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES World News

