
கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தன் ஒர் அங்கமாக யாழ் முற்றவெளி பகுதியில் சிரமதானப்பணி
யாழ்ப்பாணம் முற்றவெளிப் பகுதியில் காணப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் ஏனைய கழிவுப் பொருட்களை மன நேற்று (20) சுண்ணாகம் ரோட்டரி கழகத்தால் சிரமதான பணி மூலம் தூய்மையாக்கப்பட்டது.
இந்த சிரமதான பணியில் றொட்ரிக் கழக அங்கத்தவர்கள் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்தப் பிரதேசம் நெடுந்தூர தனியார் பேரூந்துகள் தரித்து நிற்கும் இடமாகவும் மக்கள் அதிகளவாக ஒன்று கூடும் இடமாகவும் காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது .
இவ்வாறான சிரமதானப் பணிகளை யாழ் மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளிலும் ரோட்டரி கழகம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதீபன்



CATEGORIES Sri Lanka

