அம்பாறை வஸ்னாகல – பல்லன்ஒய பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம்

அம்பாறை வஸ்னாகல – பல்லன்ஒய பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம்

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் வஸ்னாகல – பல்லன்ஒய பழுதடைந்த பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலமொன்றை நிருமாணிக்கும் பணிகள் அண்மையில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.

image

மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் எல்லையில் பல்லன்வில – இங்கினியாகல வீதியில் அமைந்துள்ள இந்தப் பழைய, பழுதடைந்த பாலம் நீண்ட காலமாக பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் தலையீட்டில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சேவை ஆலோசகர்களினால் பாலத்தின் நிருமாணப் பணிகள் இடம்பெற்றது.

image

புதிய பாலத்தின் நீளம் 27மீட்டரும், அகலம் 10மீட்டருமாகும். இதற்காக 129மில்லியன் ரூபாய் செலவாகும். 15மாத காலப்பகுதியினுள் இந்தப் பாலத்தின் நிருமாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

அதன்படி 2026ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் மக்களின் போக்குவரத்துக்காக பயன்படுத்துவதற்கு வழங்கப்படவுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )