
யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று மரத்தில் மோதி விபத்து 11 பேர் காயம்
மஹியங்கனை, கிரதுருகோட்டை பிரதான வீதி, சொரபொர முதலாவது மைல்கல் பகுதியில் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்த்தில் வேனில் பயணித்த 11 பேர் காயமடைந்து மஹியங்கனை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
6 பேர் பதுளை வைத்தியசாலையிலும், 5 பேர் மஹியங்கனை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளை பகுதியைச் சேர்ந்த குழுவினர் அனுராதபுரத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

