
களுத்துறை வீதியில் வேன் -லொறி -முச்சக்கரவண்டி மோதி விபத்து12 பேர் காயம்
பண்டாரகம – களுத்துறை வீதி வேவிட்ட பகுதியில் லொறி, வேன் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.
நடனக் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று லொறி மற்றும் முச்சக்கர வண்டியின் மீது மோதியுள்ளது .
குறித்த நடனக் குழு பெரெஹெர நிகழ்விற்கு சென்றபோது நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெறுள்ளது.
காயமடைந்தவர்களை பிரதேசவாசிகள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
CATEGORIES Sri Lanka

