கட்டுநாயக்க விமான நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையம் பகுதியில் 1 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட விசேட சோதனையின்போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் 35 வயதுடைய இந்தியா நாட்டைச் சேர்ந்தவராக இருப்பதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )