
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று நாடு திரும்பினார்
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று நாடு திரும்பினார்.
இன்று காலை 09.30ற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை ஜனாதிபதி உற்பட குழுவினர் வந்தடைந்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பர் 22 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டார்.
பின்னர், ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பர் 27 ஆம் தேதி காலை ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஜப்பானில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் உற்பட முக்கிய தலைவர்கள் சந்திப்பு மற்றும் முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்துகொண்டனர்.

