நீண்டகாலமாக போதைப்பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

நீண்டகாலமாக போதைப்பொருட்களை விற்பனை செய்த நபர் கைது

நீண்டகாலமாக ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை விநியோகித்த சந்தேக நபரை அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினர் இன்று (09) கைது செய்துள்ளனர்.

அம்பாறை தலைமையக பொலிஸ் பிரதான பரிசோதகரின் மேற்பார்வையின் கீழ் அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நடாத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் பின்னர் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடான துபாய் நாட்டில் இருந்து இயங்கும் போதைப்பொருள் கடத்தல்காரரின் தலைமையில் குறித்த கைதான சந்தேக நபர் செயல்பட்டு வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பதில் பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டுதலில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )