சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்!

சட்டத்தரணியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு விளக்கமறியல்!

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் வளாகத்தில் சட்டத்தரணி ஒருவரை தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டத்தரணி ஒருவர், கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று 10) இடம்பெற்ற வழக்கு விசாரணையை முடித்துவிட்டு, மீண்டும் வீடு நோக்கி செல்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியிருந்த தனது காரை செலுத்த முன்றுள்ளார்.

இதன்போது சிறைச்சாலை பஸ் ஒன்று நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், பஸ்ஸை நிறுத்துவதற்காக காரை அங்கிருந்து எடுக்குமாறு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சட்டத்தரணியிடம் கூறியுள்ளார்.

இதனால் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் சட்டத்தரணிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது பொலிஸ் கான்ஸ்டபிள் சட்டத்தரணியை தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )