
மாவீரர் தினத்தை முன்னிட்டு தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள துப்புரவு பணிகள்
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தரவை மாவீரர் துயிலுமில்லத்தில் துப்புரவு செய்யும் பணிகள் தரவை மாவீரர் துயிலுமில்ல நிருவாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தரவை மாவீரர் துயிலுமில்ல நிர்வாகத்தின் உபதலைவர் பூ.மயில்வாகனம் தலைமையில் இடம்பெற்ற இந்த துப்பரவுப் பணியில் குறித்த நிர்வாகத்தின் பிரதிநிதிகள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
துப்பரவுப் பணி ஆரம்பத்தில் மாவீரர் ஒருவரின் தாயாரினால் நினைவுச் சுடரேற்றப்பட்டு, வருகை தந்தவர்களால் மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
CATEGORIES Uncategorized

