
50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கர வண்டி விபத்து
இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் நேற்று (12) வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

