7 மாவட்டங்களுக்கு  மண்சரிவு எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக ஏழு மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கையானது நேற்று (15) மாலை 7.30 மணி முதல் இன்று (16) மாலை 7.30 மணிவரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பின்வரும் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நிலை – 1 (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டம் ,மாத்தளை மாவட்டம், கேகாலை மாவட்டம் ,குருநாகல் மாவட்டம் , கம்பஹா மாவட்டம், மொனராகலை மாவட்டம் ,காலி மாவட்டம்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )