மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல்

மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரிக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி, சட்டவிரோதமாக ரூ.28 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் சொத்துக்களை சம்பாதித்ததாக சந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )