
மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் வெளியான அர்ஜுன மகேந்திரனின் புகைப்படம் !
2015 ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக தேடப்பட்டு வரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் புதிய புகைப்படத்தை மூத்த பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
தற்போது சிங்கப்பூரில் வசிக்கும் மகேந்திரன், சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னைத் தொடர்பு கொண்டு புகைப்படத்தைப் பகிரங்கமாகப் பகிர அனுமதி அளித்ததாக குறித்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார் .
அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் மத்திய வங்கி ஆளுநராக முதன்முதலில் நியமிக்கப்பட்ட மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறியபோது, திருமணத்தில் கலந்து கொள்ள சிங்கப்பூர் சென்றுள்ளதாகவும், விரைவில் திரும்பி வருவார் என்றும் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்.
ஆனால், அதன் பின்னர் அவர் நாடு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

