
செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!
இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிளின் மனைவியின் தாய் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் “மாத்தறை ஷான்” என்பவரின் நெருங்கிய சகா ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளது.

