
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் பணப் பையுடன் கைது
போதைப்பொருள் கடத்தலின் மூலம் சம்பாதித்த 30,24,900 ரூபாய் பணத்துடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டபோது சந்தேக நபரிடம் இருந்து 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலன்னறுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, மனம்பிட்டி மோப்பநாய் பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து நேற்று பிற்பகல் பொலன்னறுவைபொலிஸ் பிரிவிக்குற்பட்ட பெந்திவெவ பகுதியில் நடத்திய சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் பெந்திவெவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் எனவும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலன்னறுவை போலீசார் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka

