
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீண்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட பஸ் சேவைகளை அறிவித்துள்ளது.
அதற்கமைய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிவிப்பின்படி, சகல போக்குவரத்து ஏற்பாடுகளும் கொழும்பிலுள்ள பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படும். குறிப்பாக ஹட்டன், வெலிமடை, பதுளை, பசறை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் செல்லும் பாதைகளில் பயணிகள் போக்குவரத்து சேவை அதிகரிக் கப்படுமென ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
CATEGORIES Sri Lanka

