
பிரேசிலில் பஸ் கவிழ்ந்து விபத்து ; 17 பேர் பலி
பிரேசிலின் பெர்னாம்புகோ மாகாணம் ப்ரூமாடோ நகரத்தில் சுற்றுலா பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மணல்மேட்டில் மோதி விபத்துக்குள்ளனது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.
மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
CATEGORIES World News

