
IDMNC பல்கலைக்கழகம் மற்றும் தென்கொரிய Far East பல்கலைக்கழகம் இணைந்து அறிமுகப்படுத்திய 4 கொரிய பட்டப்படிப்புகள்
விமானப் பாதுகாப்பு தொடர்பான தரமான கற்கை நெறியை இலங்கையர்களுக்கு வழங்கும் புதிய திட்டத்தின் ஆரம்ப விழா நேற்று (20) பண்டாரநாயக்க மாநாட்டில் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தென்கொரிய “Far East பல்கலைக்கழகம் மற்றும் IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் இணை ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சித்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்ல் Aviation Safety Management என்ற விமானப் பாதுகாப்பு மேலாண்மை பட்டப்படிப்பு உட்பட 4 கொரிய பட்டப்படிப்புகள் குறித்து ,”Far East பல்கலைக்கழகத்தின் தலைவர் உட்பட பிரதிநிதிகள் குழுவினரால் , விரிவான புரிதல் ஏற்படுத்தப்பட்டது.
Far East தென்கொரிய பல்கலைக்கழகத்துடன் இலங்கையில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த உயர் கல்வி நிறுவனமான IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையிலான பல்வேறு துறையில் உயர் கற்கைநெறிகளுக்கு மாணவர்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தநிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் கலாநிதி.வி.ஜனகன் மற்றும் தென்கொரிய சர்வதேச பல்கலைக்கழகத்தின் தலைவர்.லீவ்யு கீ , பல்கலைக்கழக உயர் மட்ட குழு ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தென்கொரியா பிரபல சர்வதேச பல்கலைக்கழகம்மான Far East பல்கலைக்கழகத்துடன் இலங்கையில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த உயர் கல்வி நிறுவனமான IDMNC சர்வதேச உயர் கல்வி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையிலான பல்வேறு துறையில் உயர் கற்கைநெறிகளுக்கு மாணவர்களை பகிர்ந்து கொள்ளும்
ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கடந்த ஜூன் மாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.













