முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் இன்று (24) இடம்பெற்று வரும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் ” எமது அரசியல் கொள்கையில் நாம் கவலையடைந்திருக்கிறோம், சிறைவாசம் அனுபவித்திருக்கிறோம். அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கவில்லையாயின் அவர்களின் அரசியல் வாழ்க்கை பூரணமடையாது. 

எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். 

எனவே அவரை விடுப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும், சட்டத்தரணிகளும் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை முனைப்புடன் முன்னெடுக்கவுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )