
கத்தி குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி
வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் உள்ள மீனவ வாடியில் இருந்தவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு கத்தி வெட்டில் முடிந்ததில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
நேற்று முன்தினம் (22) இரவு இடம்பெற்ற சம்பவத்தில் செங்கலடி மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி வடிவேல் (வயது- 48) என்பவரே கத்தி வெட்டுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த சைத்தான் மகேஸ்வரன் (வயது- 41) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே வேளை கத்தி வெட்டினை மேற்கொண்ட உடப்பு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேக நபர் மருதங்கேணிப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

