
நாடு முழுவதும் 40,633 டெங்கு நோயாளிகள் பதிவு ; 22 பேர் உயிரிழப்பு
2025ஆண்டு முதல் மாதத்திலிருந்து நேற்று (20) வரை நாடு முழுவதும் 40,633 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் பிரஷீலா சமரவீர இன்று (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
”பெரும்பாலான நோயாளிகள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அதிக ஆபத்துள்ள 11 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களாகும்.
இதற்கிடையில், இதே காலகட்டத்தில் 22 உயிரிழப்பு பதிவாகியுள்ளன. அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
பாடசாலை அமைப்புகள், அரசு நிறுவனங்கள், மத இடங்கள் மற்றும் கைவிடப்பட்ட நிலங்கள் மற்றும் கட்டிடங்களிலேயே நுளம்பு இனப்பெருக்கம் காணப்படுகின்றன.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், மருத்துவரின் ஆலோசனைப்படி தேவையான சிகிச்சையைப் பெறுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

