கிரிஷ் வழக்கிலிருந்து நீதிபதி ஒருவர் விலகல்

கிரிஷ் வழக்கிலிருந்து நீதிபதி ஒருவர் விலகல்

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, வழக்கில் இருந்து விலகுவதாக இன்று (27) அறிவித்துள்ளார். 

சனத் பாலசூரிய மற்றும் பொத்தல ஜயந்த ஆகிய இரு நபர்கள் பேஸ்புக்கில் தன்னைப் பற்றி பதிவிட்ட கருத்துகளைத் தொடர்ந்து தான் இந்த முடிவை எடுத்ததாக நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று (27) திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

அதன்படி, வழக்கை விசாரிக்க பொருத்தமான நீதிபதியை நியமிப்பதற்காக அதனை கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திக்கே முன்னிலைக்கு அனுப்புவதாகவும் அவர் திறந்த நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )