26வது ஐ.நா. சுற்றுலா பொதுச் சபைக்கு இலங்கைக்கு அழைப்பு

26வது ஐ.நா. சுற்றுலா பொதுச் சபைக்கு இலங்கைக்கு அழைப்பு

ரியாத்தில் நடைபெறும் 26வது ஐ.நா. சுற்றுலா பொதுச் சபைக்கு இலங்கைf;f[ உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவர் காலித் ஹமுத் நாசர் அல்-கஹ்தானி, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹெராத் ஆகியோருக்கிடையில் நேற்று (21) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள் மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )