பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட 7 பேருக்கு விளக்கமறியல்

பிரமிட் திட்டத்தில் ஈடுபட்ட 7 பேருக்கு விளக்கமறியல்

பிரமிட் திட்டத்தை இயக்குதல், ஊக்குவித்தல் மற்றும் அந்த திட்டத்தை நிர்வகித்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இரத்மலானை, பன்னிப்பிட்டிய, கல்நெவ, ஹோகந்தர, பேராதனை மற்றும் கொழும்பு 04 பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரமிட் திட்டத்தை இயக்குதல், ஊக்குவித்தல் மற்றும் அந்த திட்டத்தை நிர்வகித்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில்7 சந்தேக நபர்கள் நேற்று (23) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )