
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரம் மற்றும் பொதுத் தகவல் தொழில்நுட்பத் பரீட்ச்சைகளுக்கான அனுமதி அட்டைகள் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரம் மற்றும் பொதுத் தகவல் தொழில்நுட்பத் பரீட்ச்சைகளுக்கான அனுமதி அட்டைகள் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரம் மற்றும் பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்ச்சைகளுக்கான அனுமதி அட்டைகள் அனைத்து வலயக் கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனைத்து அதிபர்களும் தங்கள் பாடசாலைகளுக்குரிய அனுமதி அட்டைகளை அந்தந்த வலயக் கல்வித் அலுவகத்தில் துணை அல்லது உதவிப் பணிப்பாளரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள், அவர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என ஆணையர் நாயகம் தெரிவித்தார்.
பரீட்சார்த்திகளின் பெயர்கள், பாடங்கள் அல்லது மொழிகள் தொடர்பாக ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருந்தால், அத்தகைய மாற்றங்களை அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மேற்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையர் நாயகம் கூறினார்.
அனைத்து திருத்தங்களும் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் பரீட்சைகள்ஆணையர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் டிசம்பர் 5 வரை நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறும். பொதுத் தகவல் தொழில்நுட்பபரீட்சை டிசம்பர் 6 ஆம் திகதி 1,665 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என

