
இலங்கையில் குறைவடைந்து வரும் திருமணங்கள்
2024ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்கள் செய்துகொள்ளும் எண்னிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் தரவுகள் தெரிவிக்கின்றன.
2024ஆம் ஆண்டில் மொத்தம் 139 290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ,இது 2023ஆம் ஆண்டைவிட 8 சதவீதம் குறைவானது எனவும் தரவுகள் காட்டுகின்றன.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட 2022ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 171,140 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் தரவுகள் தெரிவிக்கின்றன.
CATEGORIES Sri Lanka

