தெற்காசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரில்                                                   இலங்கைக்கு சஃபியா- தங்கம் ,                  பசிந்து மல்ஷான் – தங்கம்                      அமாஷா- வெள்ளி,                         விக்னராஜ் வக்ஷன் -வெள்ளிப் பதக்கங்களை பெற்றுக் கொடுத்துள்ளனர்

தெற்காசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இலங்கைக்கு சஃபியா- தங்கம் , பசிந்து மல்ஷான் – தங்கம் அமாஷா- வெள்ளி, விக்னராஜ் வக்ஷன் -வெள்ளிப் பதக்கங்களை பெற்றுக் கொடுத்துள்ளனர்

இந்தியா ரஞ்சியில் நேற்று ஆரம்பமாகிய 4வது தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கையை சேர்ந்த சஃபியா யாமிக் 11.53 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கத்தையும், அமாஷா டி சில்வா 11.72 வினாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

நேற்று நடைபெற்ற 4வது தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பசிந்து மல்ஷான் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்று கொடுத்தார்.

ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் அவர் 16.19 மீட்டர் தூரம் தாண்டி சாதனை படைத்தார்.

தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மலையகத்தைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அவர் 14 நிமிடங்கள் 23.21 வினாடிகளில் இலக்கை அடைந்து சாதனை படைத்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )