
பிரான்சில் நடைபெற்ற நான்காவது பெண்நிலைவாத வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான அமைச்சரவை மாநாடு
நான்காவது பெண்நிலைவாத வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான அமைச்சரவை மாநாடு பிரான்சில் நடைபெற்றதுடன் அந்த மாநாட்டில் இலங்கை நாட்டினைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன அவர்கள் கலந்து கொண்டார்.
அங்கு பெண்நிலைவாத வெளிநாட்டுக் கொள்கை, உலகின் தென் பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உண்மையில் என்ன அர்த்தமளிக்கின்றது என்பதைப் பற்றி பிரதியமைச்சர் அங்கு உரையாற்றியிருந்தார்.
இச்சுற்றுப்பயணத்தின் போது, அவர் பிரான்ஸ் வெளிநாட்டு அலுவல்களுக்கான துணை அமைச்சர் எலியனோர் காரியோ (Ms. Eléonor Caroit) மற்றும் கலாசார செயலாளர் லூக் அலையர் (Mr. Luc Allaire) ஆகியோருடன் பயனுள்ள இருதரப்பு கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தார்.
அதன்போது இரு நாடுகளுக்கிடையில் ஆழமான ஒத்துழைப்பினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் பிரதியமைச்சர் ஆராய்ந்திருந்தார்.
மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க பிரான்ஸ் நாட்டின் செனட் சபையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலும் பிரதியமைச்சர் கலந்து கொண்டார்.



