
யாழில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோப்பாய் சந்தியில் நேற்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனியார் பேருந்து, ஹையேஸ் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன குறித்த சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் இருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

