மதுபான வரி தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவிப்பு

மதுபான வரி தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவிப்பு

மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வரி செலுத்த வேண்டிய காலக்கெடுவை மாற்றியமைக்கும் புதிய வர்த்தமானி அறிவிப்பு இன்று (28) முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த அறிவிப்பு நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களால் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கலால் கட்டளைச் சட்டம் பிரிவு 22 இன் கீழ் ஒவ்வொரு உரிமம் பெற்ற உற்பத்தியாளரும் குறிப்பிட்ட திகதிக்குள் அல்லது அதற்கு முன் வரி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பின்படி,

  • வரி அல்லது கட்டணம் உரிய திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் செலுத்தப்படாவிட்டால், உரிமம் இடைநிறுத்தப்படும்.
  • மேலும், 90 நாட்களுக்கும் மேல் செலுத்தப்படாத பட்சத்தில், அந்த உரிமதாரரின் அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்படும்.

முன்னதாக இத்தகைய நடைமுறை செயல்படுத்தப்படவில்லை என்றும், இது புதிய சட்ட திருத்தமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேபோல், உரிமம் இடைநிறுத்தப்படும் காலம் 6 மாதங்களாகக் குறைக்கப்படும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

இந்த மாற்றம், கலால் வரி ஏய்ப்பைத் தடுக்கவும், வருவாய் வசூலை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )