
நுவரெலியாவில் பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து
நுவரெலியா ராகலையில் பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் நேற்று (27) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரின் முயற்சியில் தீப்பரவல் இன்று (28) அதிகாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த தீ விபத்தில் குறித்த ஆடை வர்த்தக நிலையத்தில் உள்ளே இருப்பில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka

