
பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவுக்கு பிடியாணை
நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் இன்று (29) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
அவர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி, சந்தேகநபர் தேசிய நில விநியோக திட்டத்தில் பங்கேற்பதால் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரீசிலித்த நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka

