
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் இன்று (29) உத்தரவிட்டார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க அவர்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

