பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது உயிருக்கு அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

கனடாவில் வசிக்கும் நபர் ஒருவர் தொலைபேசி ஊடாக தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். 

அதேவேளை , நீர்கொழும்பு பகுதியில் நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருவதும் , தற்கொலை செய்து கொண்ட நபருக்கும் , பெண்ணொருவருக்கும் , பாராளுமன்ற உறுப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக தனது யூடியூப் தளத்தில் கருத்துக்களை பதிவு செய்த யூடியூப்பர் ஒருவருக்கு எதிராக மன்னர் நகர சபை நகரபிதா மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )