
தெற்காசிய சிரேஷ்ட தடகள போட்டியில் பதக்கம் வென்ற விமானப்படை வீரர்கள் கௌரவிப்பு
4வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் 2025 ஒக்டோபர் 24 முதல் இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்றது.

இப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச விருதுகளை வென்ற விமானப்படை விளையாட்டு வீரர்கள் இன்று விமானப்படை தலைமையகத்தில் விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்கவை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது, போட்டி முழுவதும் சிறந்த விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தி சர்வதேச விருதுகளை வென்ற விமானப்படை விளையாட்டு வீரர்களுக்கு விமானப்படைத் தளபதி புதிய பதவி உயர்வுகள் மற்றும் பணப் பரிசுகளையும் வழங்கினார்.
விமானப்படையின் பெருமைக்கு மட்டுமல்ல, இலங்கைக்கும் அவர்களின் விளையாட்டுத் திறமை மூலம் அவர்கள் கொண்டு வந்த கௌரவத்திற்காக அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka

