
ஒக்டோபரில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கடந்த ஒக்டோபர் மாதத்தில் 165,193 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.5% அதிகரிப்பாகும் என அந்த அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்தியாவில் இருந்து 48,113 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.
ஒக்டோபர் மாதத்தில் பிரித்தானியாவில் இருந்து 12,934 பேரும், ரஷ்யாவிலிருந்து 11,496 பேரும், சீனாவிலிருந்து 10,864 பேரும், ஜெர்மனியில் இருந்து 9,753 பேரும் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

