எதிர்க்கட்சித் தலைவருக்கும் இந்திய மக்களவை சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவருக்கும் இந்திய மக்களவை சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பாராளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பாராளுமன்ற செயல்முறை தொடர்பான சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதில் அவதானம் செலுத்தி பெறுமதியான கலந்துரையாடல் நிமித்தம் இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்தார்.

நிறுவன தொழில்முறையை மேம்படுத்துதல், சட்டவாக்கத் துறையோடு தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் பாராளுமன்றத்தினுள் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே இங்கு பல கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

image

கட்டமைப்பு சார் பரிமாற்றங்கள், கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் திறன் மேம்பாடு போன்ற முன்முயற்சிகள் மூலம் இலங்கை பாராளுமன்றத்திற்கும் இந்திய மக்களவைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இவர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பாராளுமன்ற ஒருமைப்பாட்டினது மதிப்புகளுக்காக இரு நாடுகளிலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட அர்ப்பணிப்புகளை இச்சந்திப்புச் சுட்டிக்காட்டின.

image

இந்தக் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, மக்களவை கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள புதிய சபாநாயகர் அலுவலகத்தைப் பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைக்கப்பட்டார்.

இங்கு, அதிநவீன வசதிகளையும், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, காகிதமில்லாப் பாராளுமன்ற இயக்க முறைமைக் கட்டமைப்பு, நவீனமயமான சட்டமன்ற நிர்வாகம், செயல்திறன் தொடர்பான மாதிரியையும் இதன்போது கண்டுகொள்ள முடிந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )