வவுனியாவில் குடும்பப் பெண் படுகொலை ; பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்

வவுனியாவில் குடும்பப் பெண் படுகொலை ; பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன்

வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணொன்றின் சடலம் நேற்று (04) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த 25வயதுடைய பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டிற்குச் சென்று பார்த்த போது தனது மகள் சடலமாகக் கிடந்ததைக்கண்டு பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பெண்ணின் கணவரும் அவரது இரண்டு வயதான பெண் குழந்தையும் மாயமாகியுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் 33 வயதுடைய கணவர் தனது மகளுடன் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் இன்று (05) சரணடைந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக, சந்தேகநபர் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )