ஜனாதிபதி இன்று பிற்பகல் 01.30க்கு வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்

ஜனாதிபதி இன்று பிற்பகல் 01.30க்கு வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அல்லது வரவு செலவுத் திட்ட உரை இன்று இடம்பெறவுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற வகையில் , ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் 01.30க்கு பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை சமர்ப்பிக்கவுள்ளார்.

அதன்படி, ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான வரவு செலவு திட்ட விவாதம் நாளை (08) முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் 17 நாட்களுக்கு நடைபெறும் எனவும் , மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறும் எனவும் பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, ஏனைய நாட்களில் ஒவ்வொரு நாளும் வரவு செலவு திட்ட விவாதம் நடைபெறும் எனவும்பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டில் மொத்த அரசாங்கச் செலவு ரூ. 4,434 பில்லியன் ஆகும்.

அவற்றில் நிதியமைச்சகத்திற்கு அதிகளவு நிதியாக ரூ. 634 பில்லியன் ஒதுக்கப்பட்ட்டுள்ளது .

மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சிற்கு ரூ. 618 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது,

பொது நிர்வாக அமைச்சிற்கு ரூ. 596 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 554 பில்லியன் ஆகும்,

பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 455 பில்லியன் ஆகும்.

கல்வி அமைச்சிற்கு ரூ. 301 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது,

ஜனாதிபதியின் செலவுக்காக ரூ. 11 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )