இன்று நாட்டின் சில பகுதிகளில்                         75mm க்கும் அதிக மழை

இன்று நாட்டின் சில பகுதிகளில் 75mm க்கும் அதிக மழை

மேல் , சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரதேசங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன்கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று , மின்னல் மற்றும் இடி தாக்கங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )