ஹோர்மோஸ் பிரச்சினைக்கு வர மறுத்த நேட்டோவை கடுமையாக சாடிய டிரம்ப்

ஹோர்மோஸ் பிரச்சினைக்கு வர மறுத்த நேட்டோவை கடுமையாக சாடிய டிரம்ப்

ஈரான் போரில் இணைவதற்கோ அல்லது ஹோமுஸ் (Hormuz) நீரிணையின் பாதுகாப்பிற்காகப் படைகளை ஈடுபடுத்துவதற்கோ தவறியமைக்காக, நேட்டோ அமைப்பின் ஏனைய உறுப்பு நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.

அமெரிக்கா இன்றி நேட்டோ அமைப்பிற்கு எந்த அதிகாரமும் இல்லை என ட்ரம்ப் தனது ‘Truth Social’ சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்: “தற்போது அந்தப் போர் இராணுவ ரீதியாக வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மிகக் குறைந்த ஆபத்து உள்ள தருணத்தில், அவர்கள் செலுத்த வேண்டியுள்ள அதிகப்படியான எண்ணெய் விலை குறித்துப் புலம்புகிறார்கள்.
ஆனால் அதிக எண்ணெய் விலைக்கு ஒரே காரணமான ஹோமுஸ் நீரிணையை திறக்க உதவுவதற்கு அவர்களுக்கு விருப்பமில்லை.
இது மிகவும் எளிமையான இராணுவ நடவடிக்கை..
இதைச் செய்வது அவர்களுக்கு மிக எளிதானது, ஆபத்தும் இல்லை. கோழைகளே, நாங்கள் இதை நினைவில் வைத்திருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )