சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.9 மில்லியனை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

அதேநேரம், நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மொத்தம் 32,815 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சுமார் 1,923,502 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில், அதிகபட்ச தினசரி வருகை 7,412 சுற்றுலாப் பயணிகளாக நவம்பர் முதலாம் திகதி பதிவாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )