
மத்திய கிழக்கில் தலைமறைவாகியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த 7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சரணடைய விருப்பம்
மத்திய கிழக்கில் தலைமறைவாகியிருக்கும் இலங்கையைச் சேர்ந்த ஏழு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கை பொலிஸில் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறும் போதைப்பொருள் தேசிய ஒழிப்பு திட்டத்தின் கொழும்பு மாவட்ட செயல்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தலைமறைவாகியிருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், தாம் போதைப்பொருள் வியாபாரம் செய்யும் இடங்களையும் வெளிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது அநேகமானவர்கள் போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் எண்ணம் கொண்டிருப்பாதால் அதனை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka

