புகழ்பெற்ற பாடகி லதா வல்பொல அவர்களின் பிறந்த தினம் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்றார்

புகழ்பெற்ற பாடகி லதா வல்பொல அவர்களின் பிறந்த தினம் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்றார்

பல தசாப்தங்களாக சிங்கள பாடல் உலகில் ராணி என மகுடம் சூடிய, புகழ்பெற்ற பாடகியான கலாசூரி திருமதி லதா வல்பொல அவர்களின் 92 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று காலை அன்னாரது இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்து, அவரோடிணைந்து பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க, ரோஹன பண்டார, ஹெக்டர் அப்புஹாமி, ஜெ.சி.அலவதுவல, திலிப் வெதாராச்சி, எம். தர்மசேன, கீங்ஸ் நெல்சன், சித்ரால் பெர்ணான்டோ, பீ. ஆரியவங்ச ஆகியோருடன் பாடகர்கள், பாடகிகள் மற்றும் திருமதி லதா வல்பொல அவர்களினது குடும்ப அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )