கடுவலையில் அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்

கடுவலையில் அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல்

கடுவலை, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் இன்று (19) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. 

இந்த தீப்பரவலில் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கொழும்பு மற்றும் கோட்டை மாநகர சபைகளுக்கு சொந்தமான தீயணைப்பு படையினர் இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

குறித்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )