
கொழும்பு – கண்டி பிரதான வீதி கணேதென்ன பகுதி ,மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது
கடுகன்னாவ கீழ் பிரிவு கணேதென்ன பகுதியில் உள்ள கடை ஒன்றின் மீது ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நேற்று காலை மூடப்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதி கணேதென்ன பகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது என கேகாலை மாவட்ட செயலாளர் ஜகத் எம். ஹேரத் தெரிவித்தார்.
கணேதென்ன பகுதியிலிருந்து வரும் பிரதான வீதி மூடப்பட்டுள்ளது எனவும் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே மழை பெய்து வருவதாகவும், மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் கேகாலை மாவட்ட செயலாளர் கூறினார்.
கனமழை காரணமாக ஆபத்து மேலும் அதிகரிக்கும் என்றும், மீட்புப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், இன்று காலை சீரமைப்பு பணிகளை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கேகாலை மாவட்ட செயலாளர் ஜகத் எம். ஹேரத் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“தற்போது, இந்தப் பகுதியை மூட நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்தப் பகுதியை மக்கள்பயன்படுத்த முடியாது .
வீதி எப்போது திறக்கப்படும் என்பதையும் நாங்கள் உங்களுக்கு மீண்டும் தெரிவிப்போம்.
அதுவரை வீதி மூடப்பட்டிருக்கும் . குறிப்பாக இப்பகுதி குடியிருப்பாளர்கள் மற்றும் பயணிக்கும் பொதுமக்களுக்கும் இங்கு வர அனுமதி இல்லை.
இந்த பகுதி மிகவும் பாதுகாப்பற்றதாக அடையாளம் காணப்பட்டுள்ளதால் எவரையும் அனுமதிக்காத வகையில்
போலீசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.” என கேகாலை மாவட்ட செயலாளர் ஜகத் எம். ஹேரத் தெரிவித்தார்.

