
கொழுப்பு – கண்டி வீதியில் பயணிப்பவர்களுக்கான மாற்று வழிகள் உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்
நேற்று கடுகண்ணாவ பகுதியில் ஏற்பட்ட திடீர் அனர்த்ததால் பாதிக்கப்பட்ட பகுதி தற்போது பெரகல இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இயல்பு நிலைக்குத் திரும்புயுள்ளதாக தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த 24 மணி நேரத்திற்கு கடுகண்ணாவ கீழ்ப்பிரிவு பகுதியிலிருந்து கொழும்பு – கண்டி பிரதான வீதியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி,சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு – குருநாகல் – கண்டி
கொழும்பிலிருந்து – கரடுபன -கண்டி
கொழும்பிலிருந்து -மாவனெல்ல – ஹெம்மாதகம – ராம்பல – கண்டி
கொழும்பிலிருந்து மாவனெல்ல, கணேவத்த சந்தி கோவில் கந்த வழியாக பிலிமத்தலாவ, கண்டி போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது
நாளை நடைபெற உள்ள உயர்தரப் பரீட்சைக்காக கண்டி மற்றும் கடுகண்ணாவ பகுதிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மாவனெல்ல மற்றும் கடுகண்ணாவ டிப்போக்கள் மூலம் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கேகாலை மாவட்ட செயலாளர் மண்சரிவுப் பகுதியைப் பார்வையிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

